TNPSC Thervupettagam

தேசியப் பால் தினம் - நவம்பர் 26

November 29 , 2024 24 days 88 0
  • இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் பின்னணியில் இருந்த டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளினைப் போற்றும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் ஆனது, மனித ஊட்டச்சத்தில் பாலின் மிகவும் முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுகிறது மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • டாக்டர் குரியன் அவர்கள் ‘இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப் படுகிறார்.
  • உலகின் மிகவும் பெரிய ஒரு வேளாண்மைசார் திட்டமாக அறியப்படும் அவரது ‘ஃப்ளட் நடவடிக்கைக்காக’ (1970) அவர் பிரபலமாக அறியப்படுகிறார்.
  • அவரது முயற்சியால், 1998 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விஞ்சி இந்தியா மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக ஆனது.
  • அவர் தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) ஸ்தாபனத் தலைவர் ஆவார்.
  • அமுல் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்தாபனத்திலும் வெற்றியிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • அவருக்கு பத்மஸ்ரீ (1965), பத்ம பூஷன் (1966), பத்ம விபூஷன் (1999) மற்றும் உலக உணவுப் பரிசு (1989) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தின் முதல் நாள் ஆனது உலகப் பால் தினமாக கடை பிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்