தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - நவம்பர் 7
November 9 , 2019 1845 days 646 0
தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினமானது முதன்முதலில் மத்தியச் சுகாதார அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தனால் 2014 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப் பட்டது.
இத்தினமானது புற்றுநோய், அதன் சிகிச்சை முறைகள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக நவம்பர் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அனுசரிக்கப் படுகின்றது.
கேரளாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் இலவசப் புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதற்காக "சுஹூர்த்தம்" என்ற ஒரு திட்டத்தை அம்மாநில அரசு முன்மொழிந்துள்ளது.
புற்றுநோய பற்றிய லான்செட் அறிக்கையின்படி, இதய நோய்க்குப் பிறகு இரண்டாவது கொடிய நோயாக (மரணம் ஏற்படுத்தும்) இந்தியா புற்றுநோயைக் கொண்டுள்ளது.
உலகளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதியன்று உலகப் புற்றுநோய் தினம் கொண்டாடப் படுகின்றது.