தேசியப் புலனாய்வு முகமையின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம்
December 21 , 2024 2 days 20 0
தேசியப் புலனாய்வு முகமை சட்டத்தின் (NIA) அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை விசாரிப்பதற்கு அல்லது அத்தகைய "பட்டியலிடப்பட்டக் குற்றங்களை" செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர்கள் குறித்து விசாரிப்பதில் தேசியப் புலனாய்வு முகமையின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு NIA சட்டம் ஆனது, NIA விசாரிக்கக் கூடிய பல்வேறு பட்டியலிடப்பட்ட குற்றங்களின் வகைகளைக் குறிப்பிடுகிறது.
அவ்வாறு பட்டியலிடப்பட்ட குற்றங்களில் கீழ்க்காணும் சட்டத்தின் கீழான சில குற்றங்களும் அடங்கும்
வெடி பொருள்கள் சட்டம், 1908
அணு சக்தி சட்டம், 1962,
விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம், 1982,
SAARC உடன்படிக்கை (தீவிரவாதத்தினை ஒடுக்குதல்) சட்டம், 1993 மற்றும்
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 போன்றவை.