TNPSC Thervupettagam

தேசியப் புள்ளியியல் தினம் - ஜூன் 29

June 30 , 2019 1976 days 669 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று தேசியப் புள்ளியியல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்” என்பதாகும்.
  • இத்தினம் பேராசிரியர் PC மகலநோபிஸின் பிறந்த தினத்தை அனுசரிக்கின்றது.
  • இவர் இந்தியப் புள்ளியில் அமைப்பின் தலைமைக் கட்டமைப்பாளர் ஆவார். இவர் இந்தியாவின் புள்ளியியல் அறிவியலின் தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார்.
  • இவர் 1931 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை உருவாக்கினார்.
  • இவர் திட்டக் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
  • இந்தியாவின் விரைவான தொழில்மயமாக்கத்தை நோக்கிப் பணியற்றிய இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மகலநோபிஸ் மாதிரி செயல்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்