TNPSC Thervupettagam

தேசியப் புவி அறிவியல் விருது – 2018

September 24 , 2019 1770 days 824 0
  • இந்தியாவில் புவி அறிவியல், சுரங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 22 விஞ்ஞானிகளுக்கு 2018 ஆம் ஆண்டின் தேசியப் புவி அறிவியல் விருதுகள் வழங்கப்பட்டன.
  • நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி புது தில்லியில் இந்த விருதுகளை அவர்களுக்கு வழங்கினார்.
  • இந்த விருதுகள் 10 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.
  • முக்கியமான 2  விருதுகள்
    • நீர்வாழ் உயிர் புவி வேதியியல் ஆராய்ச்சித் துறையில் தனது குறிப்பிடத்தக்க உலகளாவியப் பங்களிப்புகளுக்காக பேராசிரியர் சையத் வாஜி அஹ்மண்ட் நக்வி என்பவருக்கு 2018 ஆம் ஆண்டின் தேசியப் புவி அறிவியல் விருது வழங்கப் பட்டுள்ளது.
    • எரிமலை, புவி வேதியியல் மற்றும் பாறையியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்கப் பணிகளை ஆற்றியதற்காக கோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சோஹினி கங்குலிக்கு 2018 ஆம் ஆண்டின் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்