TNPSC Thervupettagam

தேசியப் பூங்காவில் படர்ச்செடியினங்களின் பேணகச் சாலை

April 7 , 2023 603 days 318 0
  • கேரளாவின் எரவிகுளம் தேசியப் பூங்காவானது (ENP) தனது பூங்காவிற்குள் ஒரு படர்ச் செடியினங்களின் பேணகச் சாலையினை (ஃபெர்னாரியம்) அமைத்துள்ளது.
  • ஒரு மலைப்பகுதியில் இது போன்ற படர்ச்செடியினங்களின் வகைகள் நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • 104 ரகங்களில், 52 வகையான படர்ச் செடியினங்கள் இந்தப் புதிய பேணகச்சாலையில் ஏற்கனவே நடவு செய்யப் பட்டுள்ளன.
  • படர்ச்செடியினங்கள் தொற்றுத் தாவரக் குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.
  • இவை மண்ணற்ற நிலையிலும் இயற்கையாக வளரும் திறன் கொண்டவை ஆகும்.
  • இவ்வகைத் தாவரங்கள் மரங்களிலிருந்து ஊடுருவல் மூலமாக தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துகளைப் பெறுகின்றன.
  • எரவிகுளம் தேசியப் பூங்காவானது மூணாறு அருகே அமைந்துள்ள நீலகிரி வரையாடுகளின் இயற்கையான வாழ்விடமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்