TNPSC Thervupettagam

தேசியப் பெண்கள் தினம் – பிப்ரவரி 13

February 15 , 2019 2110 days 3505 0
  • தேசியப் பெண்கள் தினம் முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
  • இத்தினம் இந்தியாவின் முதல் பெண் ஆளுநரான சரோஜினி நாயுடுவின் பிறந்த தினத்தன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • சரோஜினி நாயுடு 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதியன்று பிறந்தார். அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி காலமானார்.
  • இது அவரது 135-வது பிறந்த நாள் ஆண்டு விழாவாகும்.
  • சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அறியப்படுகின்றார்.
  • இந்தியாவில் பெண்களின் வளர்ச்சி மற்றும் ஊக்கத்திற்காக அவர் செய்த சேவைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக அவரது பிறந்த தினம் தேசியப் பெண்கள் தினமாக அனுசரித்திடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.
  • அவரது பெயரையும் பிறந்த தேதியையும் தேசிய பெண்கள் தினமாக அனுசரித்திட பாரதிய மகிளா சங்கம் மற்றும் அகில பாரதிய மகிளா சம்மேளனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்