TNPSC Thervupettagam

தேசியப் பேரிடர் மீட்புப் படை எழுச்சி ஆண்டு - ஜனவரி 19

January 20 , 2022 950 days 327 0
  • 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்ததிலிருந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையானது இந்த நாளைக் கொண்டாடுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், தேசியப் பேரிடர் மீட்புப் படையானது அதன் 17வது எழுச்சி ஆண்டைக் கொண்டாடுகிறது.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் 12 தேசியப் பேரிடர் மீட்புப் படையின் படைப் பிரிவுகள் உள்ளன.
  • மேலும் 13,000 தேசியப் பேரிடர் மீட்புப் படைப் பணியாளர்கள் பாதுகாப்பான நாட்டை உருவாக்க வேண்டி பணி புரிகின்றனர்.
  • தேசியப் பேரிடர் மீட்புப் படையானது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற ஒரு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள ஒரு இந்திய சிறப்புப் படையாகும்.
  • பேரிடர் அச்சுறுத்தும் சூழ்நிலைகளில் சிறப்பான மீட்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்வதற்காக வேண்டி இது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்