அஞ்சல் ஊழியர்களின் கடின உழைப்பு, அவர்கள் செல்லும் கூடுதல் தொலைவுகள் மற்றும் நமது கடிதங்களைச் சரியான நேரத்தில் பெறச் செய்வதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப் படுகிறது
1997 ஆம் ஆண்டில் சியாட்டில் பகுதியில் தபால்களை எடுத்துச் செல்லும் ஒரு அஞ்சல் நிறுவனம் தனது ஊழியர்களின் முயற்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தேசிய அஞ்சல் ஊழியர் தினத்தைக் கொண்டாட தொடங்கியது.
இந்திய அஞ்சல் துறை 1,55,000க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களுடன் உலகிலேயே மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் அஞ்சல் வலையமைப்பைக் கொண்டுள்ளது.
ராபர்ட் கிளைவ் 1766 ஆம் ஆண்டில் ஒரு வழக்கமான அஞ்சல் அமைப்பை நிறுவினார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் 1774 ஆம் ஆண்டில் தபால் அலுவலகத்தை அமைக்க ஏற்பாடு செய்தார்.
1786 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியன்று சென்னை பொது தபால் நிலையம் திறக்கப் பட்டது.
அஞ்சல் அலுவலகச் சட்டம் XVII என்றச் சட்டமானது 1854 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டது.
1876 ஆம் ஆண்டில் இந்தியா உலகளாவிய தபால் ஒன்றியத்தில் இணைந்தது.
தபால் அலுவலகத்தில் சேமிப்பு வங்கி 1882 ஆம் ஆண்டில் திறக்கப் பட்டது.