TNPSC Thervupettagam

தேசிய அஞ்சல் தினம் - அக்டோபர் 10

October 14 , 2023 410 days 181 0
  • 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அஞ்சல் துறை ஆற்றிய பங்கைக் கௌரவிக்கும் வகையில் தேசிய அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தபால் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது 1854 ஆம் ஆண்டில் டல்ஹவுசி பிரபுவால் நிறுவப்பட்டது.
  • இந்தியாவில் இராணுவத் தபால் அலுவலகம் உட்பட 23 அஞ்சல் வட்டங்கள் மற்றும் 9 அஞ்சல் மண்டலங்கள் உள்ளன.
  • இந்தியாவில் உள்ள தபால் நிலையங்கள் 1972 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட 6 இலக்க தனிப்பட்ட அடையாள எண் குறியீடு முறையைப் பின்பற்றுகின்றன.
  • இந்தியத் தபால் துறையானது அக்டோபர் 09 முதல் 13 வரை ‘தேசிய அஞ்சல் வாரத்தை’ கொண்டாடுகிறது.
  • தபால் வாரத்தின் கருத்துரு, ‘நம்பிக்கைக்காக ஒன்றுபடுதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்