TNPSC Thervupettagam

தேசிய அஞ்சல் தினம் - அக்டோபர் 10

October 19 , 2019 1866 days 2085 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி இந்தியாவில் தேசிய அஞ்சல் தினம் கொண்டாடப் படுகிறது.
  • கடந்த 150 ஆண்டுகளாக இந்திய தபால் துறை ஆற்றியப் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • அக்டோபர் 9 அன்று கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தின் நீட்டிப்பாக இந்திய அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்திய அஞ்சல் 1854 ஆம் ஆண்டில் டல்ஹெளசி பிரபு என்பவரால் நிறுவப்பட்டது.

  • இது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • தபால் துறையின் கீழ், 6 இலக்க PIN (Postal Index Number) முறையை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் 1972 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தியது.
  • பின்கோடில் உள்ள PIN என்ற சொல் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் குறிக்கிறது
  • பின் குறியீட்டின் முதல் இலக்கமானது அப்பகுதியைக் குறிக்கிறது.
  • இரண்டாவது இலக்கமானது துணைப் பகுதியைக் குறிக்கிறது.
  • மூன்றாவது இலக்கமானது மாவட்டத்தைக் குறிக்கிறது.
  • கடைசி மூன்று இலக்கங்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கொண்டிருக்கும் தபால் நிலையத்தைக் காட்டுகிறது.
  • தேசிய தபால் வாரமும் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15 வரை கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்