TNPSC Thervupettagam

தேசிய அஞ்சல் வாரம் - அக்டோபர் 09 முதல் 15 வரை

October 13 , 2024 69 days 120 0
  • இது அஞ்சல் அமைப்பின் ஒருங்கிணைந்த சேவையை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மக்களை இணைப்பதிலும், வணிகங்களை ஆதரிப்பதிலும், உலகளாவிய தகவல் தொடர்புக்குப் பங்களிப்பதிலும் அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
  • அக்டோபர் 10 ஆம் தேதியானது தேசிய அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • முறையாக கட்டமைக்கப்பட்ட தபால் சேவையானது 1854 ஆம் ஆண்டில் டல்ஹெளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1852 ஆம் ஆண்டில், "சிண்டே டாக்" என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தபால் தலை வெளியானது.
  • இந்தியாவில் 23 அஞ்சல் வட்டங்கள் மற்றும் இராணுவ தபால் அலுவலகம் உட்பட 9 அஞ்சல் மண்டலங்கள் உள்ளன.
  • இந்தியாவில் உள்ள தபால் நிலையங்கள் 6 இலக்க PIN குறியீடு என்ற முறையைப் பின்பற்றுகின்றன என்ற நிலையில் இது 1972 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்த வாரக் கொண்டாட்டத்திற்கான கருத்துரு, "Connecting India: The Role of Postal Services in Nation Building" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்