- அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் குழுவிற்கு (Council of Scientific and Industrial Research-CSIR) 2018-ஆம் ஆண்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமை விருது (National Intellectual Property Award 2018) வழங்கப்பட்டுள்ளது.
- “முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்/ வர்த்தகமயமாக்குதல் மற்றும் காப்புரிமைக்கான நிறுவனம்” (Top R&D Institution/Organization for Patents and Commercialization) எனும் வகைப்பாட்டில் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் குழுவிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதானது மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் (Ministry of Commerce and Industry) கீழ் செயல்படுகின்ற இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தால் (Indian Intellectual Property Office) உலக அறிவுசார் சொத்துரிமை தினமான ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று பல்வேறு வகைப்பாடுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற ஓர் விருதாகும்.
அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் குழு பற்றி
- அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவானது’ ஆனது தன்னாட்சியுடைய, நாட்டின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research & Development) நிறுவனமாகும்.
- இது 1942ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- 1860ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (Societies Registration Act-1860) கீழ் அமைக்கப்பட்ட ஓர் தன்னாட்சியுடைய ஆராய்ச்சி நிறுவனமாகும்.
- பிரதமர் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் குழுவின் தலைவராவார்.
- CSIR மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Science and Technology) கீழ் செயல்படுகின்றது.