கொச்சியை அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனா நேச்சுரல் லிமிடெட்டின் கிளை மேலாண் இயக்குநர் மற்றும் இணை நிறுவனரான டாக்டர். பென்னி ஆண்டனி 2019 ஆம் ஆண்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் காப்புரிமை மற்றும் வர்த்தக மயமாக்குதலுக்கான சிறந்த தனிநபர் எனும் பிரிவில் இவ்விருதினைப் பெற்றார்.
இவர் உலகின் காப்புரிமைப் பெற்ற மஞ்சள் சாறை உருவாக்கும் BCM 95 என்ற முன்னணி செயல்முறையின் கண்டுபிடிப்பாளராவார்.
மேலும் இவரிடம் சர்வதேச அளவிலான 80 காப்புரிமைகள் உள்ளன.
இந்த விருதுடன், இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமைக் கழகம் ஆகியவை இணைந்து இவருக்கு கண்டுபிடிப்பாளர்களுக்கான WIPO-இன் விருதினை வழங்கி கவுரவித்தது.