டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆனது ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் மற்றும் முதல் துணை குடியரசுத் தலைவர் ஆவார்.
1931 முதல் 1936 ஆம் ஆண்டு வரை, ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், பின்னர் 1939 ஆம் ஆண்டில் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இவர் பணியாற்றினார்.
1954 ஆம் ஆண்டில் இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது.
1963 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ராயல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற அமைப்பின் கௌரவ உறுப்பினராகவும் அவர் சேர்க்கப்பட்டார்.
இவர் ‘The Philosophy of Rabindranath Tagore’ (‘ரவீந்திரநாத் தாகூரின் தத்துவம்’) என்ற ஒரு நூலையும் எழுதியுள்ளார்.