மத்திய மின்துறை அமைச்சகம் தேசிய ஆற்றல் இணைய வாயிலை ஆரம்பித்துள்ளது. இது இந்திய மின்துறையைப் பற்றிய தகவல்களை சேகரித்து பரப்பும் ஒரு மையப்படுத்தப்பட்ட நடைமுறையாகும்.
இது இந்திய மின்துறைக்கான மையப்படுத்தப்பட்ட அமைப்பாகும். இது 24 x 7 என்ற நேர அளவில் செயல்படும். சரியான நேரத்திய மற்றும் திறமையான தகவல் திரட்டலை உறுதி செய்ய இவை உதவும்.
மத்திய மின்துறை ஆணையம் (Central Electricity Authority-CEA) இதனை செயல்படுத்துவதற்கான அதிகார மையமாக உள்ளது.
தேசிய தகவல் மையம் (National Informatics Centre-NIC) இதனை தயாரித்து, வடிவமைத்து மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
முன்பு அமைச்சரவை ஆரம்பித்த தரங் (TARANG), உஜாலா (UJALA), வித்யுத் பிரவா (VIDYUT PRAVAH), கார்வ் (GARV), உர்ஜா (URJA) மற்றும் மெரிட் (MERIT) போன்ற அனைத்து மின்துறை சம்பந்தமான செயலிகளுக்கும் ஒற்றை இடைமுகமாக (single point interface)இது செயல்படும்.
மத்திய மின்துறையைப் பற்றிய ஆய்வுத் தகவல்களை புவித் தகவமைப்பு முறையிலான (GIS-Geographical Information System) செலுத்துதல் மூலமும், காட்சிப்படுத்தும் விளக்கப்படங்கள் மூலமாகவும் பரப்ப இது திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.