TNPSC Thervupettagam

தேசிய இயற்கை மருத்துவ தினம் - நவம்பர் 18

November 23 , 2022 641 days 243 0
  • இது நவம்பர் 18, 2018 அன்று ஆயுஷ் அமைச்சகத்தால் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) நிறுவப்பட்டது.
  • 1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியில், மகாத்மா காந்தி அகில இந்திய நேச்சர் க்யூர் அறக்கட்டளையின் தலைவராக ஆனார்.
  • எனவே, இந்த நாள் தேசிய இயற்கை மருத்துவத் தினமாக கடைபிடிக்க தேர்வு செய்யப் பட்டது.
  • இயற்கை சிகிச்சையின் பலன்களை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்த ஆண்டு நிகழ்வின் கருத்துரு: "இயற்கை மருத்துவம்: ஒரு ஒருங்கிணைந்த மருத்துவம்" ஆகும்.
  • இயற்கை மருத்துவம் என்ற சொல் ஜெர்மனியின் ஜான் ஷெல் என்பவரால் 1895 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, பெனடிக்ட் லஸ்ட்டால் பிரபலப் படுத்தப்பட்டது.
  • லஸ்ட் 'நவீன இயற்கை மருத்துவத்தின் தந்தை' என்றும் குறிப்பிடப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்