TNPSC Thervupettagam

தேசிய இளைஞர் தினம் - ஜனவரி 12

January 13 , 2020 1721 days 854 0
  • இந்திய அரசாங்கமானது சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதியை 1984 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் தினமாக அறிவித்துள்ளது.
  • இந்நாளின் நோக்கமானது சிறந்த ஆன்மீகத் தலைவரை கௌரவிப்பதும் நாட்டில் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதும் ஆகும்.
  • இந்நாளானது ‘தேசக் கட்டமைப்பிற்காக இளைஞர் சக்தியை ஒருங்கிணைப்பது” என்றக் கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
  • தேசிய இளைஞர் விழாவானது  2020 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி வரை உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது.
  • 23வது தேசிய இளைஞர் விழாவை மத்திய இளைஞர் விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
  • தேசிய இளைஞர் திருவிழாவின் கருப்பொருளானது “ஆரோக்கியமான இளைஞர்கள் ஆரோக்கியமான இந்தியா” என்பதாகும்.

விவேகானந்தர் பற்றி

  • சுவாமி விவேகானந்தர் என்று அழைக்கப்படும் நரேந்திர நாத் தத்தா 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று பிறந்தார்.
  • அவர் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் நடைபெற்ற முதலாவது மதம் சார்ந்த மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகப் பங்கேற்றார்.
  • அவர் கல்கத்தாவுக்கு அருகிலுள்ள பேலூரில் 1897 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணா மடாலயத்தை நிறுவியுள்ளார்.
  • விவேகானந்தரை "நவீன இந்தியாவின் கட்டமைப்பாளர்" என்று நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அழைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்