TNPSC Thervupettagam

தேசிய இளைஞர் விருது

January 17 , 2018 2374 days 890 0
  • நாகர்கோவிலைச் சேர்ந்த மாஷா நசீம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவருடைய சிறந்த பங்களிப்பிற்காக கௌரவம் மிக்க தேசிய இளைஞர் விருதைப் பெற்றார்.
  • வருடா வருடம் வழங்கப்படும் இவ்விருதானது தேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டதுஆகும்.
  • இது இளைஞர்களின் சிறப்பான பணியையும் சாதனைகளையும் அங்கீகரிப்பதற்காகவும்தேசிய மேம்பாடு மற்றும் சமூக சேவைத் துறையில் அவர்கள் மேலும் சிறந்து விளங்குவதற்காகவும் வழங்கப்படுகிறது.
  • மாஷா, தற்போது மாநில அரசு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் (நெருப்பில்லா முத்திரை வைப்பான்) மின் சாதனம் மூலம் அரக்கைப் பயன்படுத்தி சீல் வைக்கும் கருவி,  அதிநவீன இரயில் கழிப்பறை அமைப்பு,  எரிபொருள் நிரப்பும் இயந்திரம் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளார்.
  • மாஷாவின் மூன்று கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெறும் நிலையில் உள்ளது. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள மாஷா 2016 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில இளைஞர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்