TNPSC Thervupettagam

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான மாநில தரவரிசைக் குறியீடு

July 11 , 2022 741 days 365 0
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டு மாநில தரவரிசைக் குறியீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • பலன் வழங்கீட்டினை மேம்படுத்தும் முயற்சியில், மாநிலத்தில் நெகிழ்திறன்மிக்க உணவு முறைகளைக் கொண்டு வந்ததற்காக, ஒடிசா மாநிலம் இதில் முதலிடம் பிடித்தது.
  • பொதுப் பிரிவு சார்ந்த மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் 2வது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 3வது இடத்திலும் உள்ளது.
  • சிறப்புப் பிரிவு மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களில், திரிபுரா முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
  • நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) - பணம் வழங்கும் முறை செயலில் உள்ள 3 ஒன்றியப் பிரதேசங்களில், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ ஆகியவை முதலிடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்