மத்திய அரசானது, தூய்மையான தொழில்நுட்ப உற்பத்தியில் கவனம் செலுத்தும் வகையில், குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்துறைகளுக்கான ஒரு திட்டத்தினை உருவாக்க உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், வணிகம் செய்வதை மிக எளிதாக்குதல் மற்றும் செலவினம், தேவைக்கேற்ற வேலைவாய்ப்புகளுக்கானத் திறன்களை மேம்படுத்துதல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், தொழில்நுட்பங்கள் கிடைக்கப்பெறும் தன்மை மற்றும் தரமானப் பொருட்கள் ஆகிய ஐந்து பகுதிகள் மீது மிக அதிக கவனம் செலுத்தப் படும்.
இது மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கொள்கை ஆதரவு, அமலாக்க செயல் திட்டங்கள், நிர்வாகம் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பினை வழங்கும்.
இந்தத் திட்டம் ஆனது தோல் பொருட்களுக்கான ஆதரவைத் தவிர, தோல் பொருட்கள் சாராத தரம் வாய்ந்த காலணிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான முக்கிய வடிவமைப்பு திறன், கூறுகளின் உற்பத்தி மற்றும் இயந்திரங்களுக்கான ஆதரவினை அளிக்கும்.
இது, உயர்தரமான, தனித்துவமான, புதுமையான மற்றும் நிலையான நுட்பம் மூலமாக பொம்மைகளை உருவாக்கும் உற்பத்தி சூழல் அமைப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தும்.
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் தற்போது 17 சதவீதமாக உள்ள உற்பத்தித் துறையின் மீதான பங்கை 25 சதவீதமாக உயர்த்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.