ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப் படுகின்றது.
தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் நோக்கமானது மக்களிடையே ஊட்டச்சத்து நடைமுறை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும்.
குறிப்பாகப் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு “சீம்பால்” என்று அழைக்கப்படும் பிரசவத்திற்குப் பிறகான முதல் பால் கொடுக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
இந்தப் பிரச்சாரமானது முதன்முதலில் மத்திய அரசினால் 1982 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.