தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்நிகழ்வினை செயல்படுத்தவுள்ளது.
இதனுடைய முக்கிய குறிக்கோள் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகும். ஊட்டச்சத்தானது மறைமுகமாக நாட்டின் வளர்ச்சியையும், உற்பத்தித் திறனையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது.
2017 ஊட்டச்சத்து வாரத்தின் மையக்கரு: இளம் குழந்தைகளுக்கு உகந்த உணவு முறைகள் - சிறந்த குழந்தைகள் நலம் (Optimal Infant & Young child Feeding Practices: Better child Health.)