நாடு முழுவதும் தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை அனுசரிக்கப்படும்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து மன்றம் இவ்வாரத்தை நடத்துகிறது.
ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியின் நோக்கம் வளர்ச்சி, உற்பத்தித் திறன், பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய வளர்ச்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுகாதாரத்தின் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
தேசிய ஊட்டச்சத்து வாரம் 2018-ன் கருத்துருவானது ‘உணவுடன் இன்னும் செல்’ என்பதாகும். இதன் 2017 ஆம் ஆண்டின் கருத்துருவானது ‘உகந்த குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கான உணவூட்டல் முறைகள் : ஆரோக்கியமான குழந்தை” என்பதாகும்.