TNPSC Thervupettagam

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஊதிய விகிதம்

May 23 , 2024 57 days 184 0
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) 1,229 கோடி ரூபாயை வழங்க தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் 75% பங்கு ஆனது 921 கோடி ரூபாய் (பொருள் கூறு), 307 கோடி ரூபாய் என்பது 2024-25 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் 25% பங்காகும்.
  • இந்திய அரசு ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 25 ரூபாய் ஊதியம் ஆக உயர்த்தியது.
  • இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் "20 கோடி பணி நாட்களுக்கு" மத்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய அரசாங்கம் ஆனது அந்த மாதம் தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 319 ரூபாய் ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்தது.
  • MGNREGS திட்டத்திற்கான நிதி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது
    • தொழில் திறன் சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் (100% மத்திய அரசு நிதி),
    • குடிமைச் சேவைப் பணிகளுக்கான பொருட்கள் (75% மத்திய அரசு மற்றும் 25% மாநில அரசு) மற்றும்
    • சம்பளம் மற்றும் இதரச் செலவினங்களுக்காக (100% மத்திய அரசு நிதி).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்