1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சீன-இந்தியப் போரின் போது போரிட்ட வீரர்களை கௌரவிக்கும் விதமாக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
1962 அக்டோபர் 20 ஆம் தேதியன்று, சீன நாடானது இந்தியா மீது ஒரு பயங்கரமான தாக்குதலை நடத்தியது.
1962 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று, இரண்டாவது சீனத் தாக்குதலானது தொடங்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு நவம்பர் 20/21 ஆம் தேதிகளில் இந்த மோதல் இறுதியாக கைவிடப் பட்டது.
1966 ஆம் ஆண்டில், பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவானது, இப்போருக்காக என்று தம் உயிரைத் தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக் கௌரவிக்கும் விதமாக இந்தத் தினத்தை நிறுவியது.