“ஒரே பாரதம் சிறந்த பாரதம்” (Ek Bharat Shrestha Bharat) எனும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் எனும் பள்ளிகளுக்கான மத்திய அமைப்பால் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் (Rashtriya Edta Shivir / National Integration Camp) தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டினுடைய “வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in diversity) எனும் சித்தாந்தத்தை இலக்கிட்டு, ஊக்குவிப்பதே இந்த தேசிய ஒருமைப் பாட்டிற்கான முகாமின் நோக்கமாகும்.
நாட்டின் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் நாட்டின் பிற மாநிலத்தினுடைய கலாச்சார பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்பதே இந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் தனித்துவம் மிக்க அம்சமாகும்.