TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை தினம் – அக்டோபர் 31

November 1 , 2017 2613 days 6427 0
  • இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்-National Unity Day) கொண்டாடப்படுகிறது.
  • சர்தார் வல்லபாய் பட்டேல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராவார்.
  • அவருடைய பிறந்த நாளையொட்டி “ஒற்றுமைக்கான ஓட்டம்” (Run for Unity) என்ற தலைப்பில் டெல்லி தயான் சந்த் விளையாட்டு அரங்கில்5 கி.மீ தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது.
  • இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது” அவர் இறந்த பின்பு 1991ல் வழங்கப்பட்டது.
  • 1947-49க்கு இடைப்பட்ட காலத்தில் 550 சுதந்திர மன்னர் மாநிலங்களை (சுதேச அரசுகள்) ஒருங்கிணைத்து இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்