TNPSC Thervupettagam

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான அதிகபட்ச வயது

November 3 , 2017 2451 days 736 0
  • மத்திய நிதி அமைச்சகம், தேசிய ஓய்வூதியத் திட்டம் – தனியார் துறை என்ற பிரிவின் கீழ், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை, தற்போதைய 60 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்தியுள்ளது.
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கை 60-65 வயது கொண்ட மக்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கும், 70வது வயது வரை பங்களிப்பதற்கும் அளிப்பதற்கும் வழிவகை செய்கிறது.
  • தற்போது வரை 18 வயது முதல் 60 வயது வரையிலான தனிநபர்கள் மட்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர முடியும்.
  • தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ல் அரசு ஊழியர்களுக்கென்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 2009ம் ஆண்டு அனைத்து குடிமகன்களுக்குமான திட்டமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்