கான்பூரில் உள்ள சந்திர சேகர் ஆசாத் வேளாண் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தேசிய கங்கை ஆணையத்தின் முதலாவது கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்த ஆணையமானது “நமாமி கங்கே” என்ற இலட்சியத் திட்டத்தை ஆய்வு செய்தது.
தேசிய கங்கை ஆணையமானது கங்கை நதியின்புத்துயிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் என்றும் அழைக்கப் படுகின்றது.
இந்த ஆணையமானது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986ன் கீழ் 2016 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது.
இது தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்திற்கு (National River Ganga Basin Authority - NRGBA) பதிலாக அமைக்கப் பட்டுள்ளது.