ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 5ம் தேதி இந்தியாவில் தேசிய கடல்சார் (Maritime) தினமாக கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலாக 1964ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.‘
1919ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி அன்று சிந்தியா கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் முதல் கப்பலான SS லாயல்ட்டி (SS Loyalty) என்ற கப்பல் ஐக்கியப் பேரரசிற்கு பயணிக்க ஆரம்பித்ததில் கடற்பயண வரலாறு ஒன்று உண்டாக்கப்பட்டது.
கடல் வழி மார்க்கங்கள் பிரிட்டிஷாரால் கட்டுப்படுத்தப்பட்ட சமயத்தில் இந்த கடல் பயணம் இந்திய கப்பல்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பமாகும்.
55வது பதிப்பு தேசிய கடல் சார் தினம் - 2018ம் ஆண்டின் கருத்துரு - “இந்திய கப்பல்துறை - வாய்ப்புகளின் பெருங்கடல்”.