TNPSC Thervupettagam

தேசிய கடல்சார் தினம்

April 7 , 2019 2002 days 491 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 05 அன்று தேசிய கடல்சார் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது உலகெங்கிலும் உள்ள கண்டங்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் சுற்றுச் சுழலுக்கு உகந்த வணிகத்தை ஆதரிப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “இந்தியப் பெருங்கடல் - வாய்ப்பிற்கான கடல்” என்பதாகும்.
  • இத்தினமானது முதன் முறையாக 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று மும்பையிலிருந்து இலண்டனிற்கு இயக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது கப்பலான சிந்தியா நீராவி கடற்பயண நிறுவனத்தின் கப்பலான எஸ்எஸ் லாயல்டியின் பயணத்தின் வாயிலாக இந்தியாவின் முதலாவது கடற் பயணம் தொடங்கப் பட்டது.
  • 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வ. உ. சிதம்பரம், தனது சுதேசி கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். அதன் முதலாவது கப்பல் எஸ்எஸ் கலியா என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்