TNPSC Thervupettagam

தேசிய கணித தினம் – டிசம்பர் 22

December 25 , 2022 608 days 234 0
  • சீனிவாச இராமானுஜன் அவர்களின் படைப்புகளை அங்கீகரித்து அவற்றைக் கொண்டாடச் செய்வதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் 1887 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
  • 2012 ஆம் ஆண்டில் இந்தக் கணித மேதை பிறந்து 125 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அப்போதையப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் இந்தத் தினமானது அறிவிக்கப்பட்டது.
  • 2012 ஆம் ஆண்டானது தேசிய கணித ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது.
  • இவர் இளம் வயதிலேயே கணிதத்தில் விருப்பத்தை வளர்த்து, தனது 12 வயதில் முக்கோணவியலில் அதீத அறிவினைப் பெற்றார்.
  • இராமானுஜன் அவர்கள் 1917 ஆம் ஆண்டில் இலண்டன் கணிதவியல் சங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அதற்கு அடுத்த ஆண்டில், நீள்வட்டத் தொகையீடுகள் மற்றும் எண்களின் கோட்பாடு குறித்த ஆராய்ச்சிக்காக அவர் மதிப்புமிக்க ராயல் சமூகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • டிரினிட்டி (திருத்துவ) கல்லூரியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரும் இவரே ஆவார்.
  • முழு அளவு கணிதப் பாடத்தில் முறையான பயிற்சி ஏதும் பெறாவிட்டாலும், அவர் மகத்தாக பணியாற்றிய பகுதிகளில் முடிவிலித் தொடர்கள், தொடர் பின்னங்கள், எண் கோட்பாடு மற்றும் கணிதப் பகுப்பாய்வு ஆகியவை அடங்கும்.
  • மிகைப் பெருக்கத் தொடர்கள், ரீமான் தொடர்கள், நீள்வட்டத் தொகையீடுகள், விரி தொடர்களின் கோட்பாடு மற்றும் ஜீட்டா தொகையீடுகளின் செயல்பாட்டுச் சமன்பாடுகள் போன்ற குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளையும் அவர் ஆற்றியுள்ளார்.
  • ராபர்ட் கனிகெல் என்பவர் எழுதிய ‘The Man Who Knew Infinity’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமானது அவரது வாழ்க்கையையும் புகழ் நோக்கிய அவரது வாழ்க்கைப் பயணத்தையும் சித்தரிக்கிறது.
  • 1729 என்பது இராமானுஜன் எண் என்று அழைக்கப்படுகிறது.
  • இது இரண்டு வெவ்வேறு வழிகளில் இரண்டு கனசதுரங்களின் கூட்டுத் தொகையாக குறிப்பிடக் கூடிய மிகச் சிறிய எண்ணாகும்.
  • இதன் காரணமாக, 1729 என்ற எண் ஆனது தற்போது இராமானுஜன்-ஹார்டி எண் என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்