தேசிய கல்விக் கருவூலம் (NAD - National Academic Depository)
July 18 , 2017 2687 days 1220 0
தேசிய கல்விக் கருவூலம் (NAD) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கூட்டு முயற்சி ஆகும். இது "கணினிமய இந்தியா" (Digital India) திட்டத்தின் கீழ் (கல்விப் பதிவுகளை / ஆவணங்களை கணினிமயம் ஆக்க) மேற்கொள்ளப்பட்ட புதுமையான முற்போக்கான முயற்சி.
"கணினிமய கல்விச் சான்றிதழ்கள் (Digital Academic Certificates) என்பதை ஒவ்வொரு இந்தியருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது என்.ஏ.டி யின் நாட்டம் ஆகும்.
கணினி மயமான, நம்பகமான, சரிபார்த்துக் கொள்ளக் கூடிய இணையவழிச் சான்றிதழ்கள், காகித சான்றிதழ்களை அச்சடிப்பதிலும் பராமரிப்பதிலும் உண்டாகும் சிக்கல்களை குறைக்க / அகற்ற உதவும்.
என்.டி.எம்.எல் (National Database Management Limited - NDML) ஆனது கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் என்.ஏ.டி (NAD) கணக்குகளுக்கு நேரடியாக கல்விச் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடுகளை செய்யவுள்ளது.
இந்த சான்றிதழ்களை மாணவர்கள் எந்நேரத்திலும் காண முடியும். மேலும் வங்கிகள் / வேலை வழங்கும் நிறுவனர்கள் காண அனுமதிக்கவும் முடியும்.
அச்சடித்த சான்றிதழ்களையும், பிற ஆவணங்களையும் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நகல்களை சமர்ப்பிக்கும் தேவைகளும் குறையும்.