சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை இந்த நாள் கொண்டாடுகிறது.
இவர் சவூதி அரேபியாவின் மெக்காவில் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி அபுல் கலாம் குலாம் முஹியுதீன் ஆக பிறந்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆசாத் 1958 ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகள் பதவி வகித்தார்.
அவர் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான சபை (ICCR), சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி மற்றும் CSIR ஆகியவற்றை அமைத்தப் பெருமைக்கு உரியவர் ஆவார்.
1951 ஆம் ஆண்டில் காரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், 1953 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக மானியக் குழு உட்பட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
1992 ஆம் ஆண்டில் நாட்டின் உயரியக் குடிமகன் விருதான பாரத ரத்னா விருதானது அவரது மரணத்திற்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டது.