TNPSC Thervupettagam

தேசிய கல்வி தினம் – நவம்பர் 11

November 14 , 2023 282 days 297 0
  • இத்தினமானது சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளினைக் குறிக்கிறது.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதி வரை அவர் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி சபை (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உள்ளிட்ட உயர் கல்வி அமைப்புகளை நிறுவியதில் அவர் ஒரு முக்கியப் பங்கினைப் கொண்டுள்ளார்.
  • அவர் காரக்பூரில் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தையும் நிறுவினார்.
  • இந்தியக் கலாச்சார உறவுகள் சபை (ICCR), சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை (CSIR) ஆகியவையும் அவரது வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்