TNPSC Thervupettagam

தேசிய காசநோய் திட்டத்திற்கான முதன்மை ஆலோசகர்

July 13 , 2024 5 days 71 0
  • உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை அறிவியலாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலகின் காசநோய் பாதிப்பில் இந்தியா 25% பங்கினை கொண்டுள்ளது என்பதோடு இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் 25 லட்சத்திற்கும் அதிகமான காசநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • 1929 ஆம் ஆண்டில், காசநோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியத்தில் இந்தியாவானது இணைந்தது.
  • 1959 ஆம் ஆண்டில், இந்திய அரசானது உலக சுகாதார அமைப்பின் உதவியுடன், பெங்களூருவில் தேசிய காசநோய் நிறுவனத்தை நிறுவியது.
  • தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் (NTP) ஆனது 1962 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
  • காசநோய் ஒழிப்பிற்கான தேசிய உத்தி சார் திட்டம் (2017-2025) ஆனது 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை அகற்றுவதற்காக உருவாக்கப் பட்டது.
  • பின்னர், காசநோயை முடிவுக்குக் கொண்டு வர காசநோய் ஒழிப்பிற்கான தேசிய உத்தி சார் திட்டம் (2020-2025) ஆனது வெளிவந்தது.
  • இந்தியா 2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் காசநோய் பாதிப்பை சுமார் 16% குறைத்துள்ளது என்பதோடு அதே காலக் கட்டத்தில் காசநோய் பாதிப்பின் காரணமான உயிரிழப்புகளையும் 18% குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்