TNPSC Thervupettagam

தேசிய கார்பன் பதிவகம்

August 26 , 2023 461 days 272 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது, கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்வதற்கான தேசியத் தரவுகள் மற்றும் செயல்முறைகளைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கு உலக நாடுகளுக்கு உதவும் வகையிலான ஒரு தடையற்ற வகையில் கிடைக்கப் பெறும் மூல மென்பொருளை உருவாக்கியுள்ளது.
  • தேசியக் கார்பன் பதிவேடு என்று அழைக்கப்படும் இந்த மென்பொருள், சமீபத்தில் ஒரு எண்ணிமப் பொதுப் பயன்பாட்டுப் பொருளாக அங்கீகாரம் பெற்றது.
  • ஒரு DPG ஆக இயங்கும் இந்தப் பதிவகம் தடையற்ற வகையில் கிடைக்கப் பெறும் மூலக் குறியீட்டைப் பயன்படுத்துவதோடு இது உலக நாடுகள் தங்கள் சொந்தத் தேவைகள் மற்றும் சூழல்களுக்கு ஏற்றவாறு தகவல்களைப் பிரதிபலிக்கவும் மாற்றியமைக்கவும் வழி வகுக்கிறது.
  • இந்தப் பதிவகத்தின் தொகுதிகளானது, மென்பொருள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப ஆவணங்கள் உலக நாடுகளால் மீண்டும் பயன்படுத்தப்படலாம் மற்றும் வடிவமைக்கப் படலாம்.
  • இது உற்பத்திச் செலவினங்கள் மற்றும் அமலாக்க காலக்கெடுவைக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்