புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் தேசிய காற்று-சூரியஒளி கலப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. புதிய திட்டங்களை ஊக்குவிப்பது மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களை கலப்பாக்குவது (hybridisation) ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மின்சாரத்தை அனுப்புவதற்கான உட்கட்டமைப்பு மற்றும் நிலங்களின் திறனான பயன்பாட்டிற்காக பெரிய மின்கம்பிவடம் இணைக்கப்பட்ட காற்று-சூரியஒளி ஒளி மின்னழுத்த கலப்பு அமைப்பினை (Wind-solar Photo Voltaic hybrid system) ஊக்குவிப்பதற்காக விரிவான கட்டமைப்பை வழங்குவதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அரசு, 2022ல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களிலிருந்து 175 GW மின்சார உற்பத்தியை அடைவதற்கு இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த ஆற்றலானது 100 GW சூரியஒளி ஆற்றல் மற்றும் 60 GW காற்று ஆற்றல் திறன்களை உள்ளடக்கும்.