தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் (National Rural Drinking Water Programme-NRDWP) தொடர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கிராமப்புற பகுதிகளுக்கு சிறந்த தரத்திலான குடிநீர் வழங்கல் சேவையை உறுதி செய்வதற்காக, வெளியீடு அடிப்படையிலான, போட்டித் திறனுடைய, விநியோகத் திட்டத்தினுடைய நீடித்த செயல்பாட்டின் மீது அதிகரிக்கப்பட்ட கவனத்தோடு சிறந்த கண்காணிப்பை உருவாக்குவதற்காக இந்த மறுசீரமைப்பும், திட்ட தொடராக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளையும் உள்ளடக்க உள்ளது.
14-வது நிதிக்குழுவின் செயற்கால சுழற்சியோடு ஒருங்கமையும் வகையில் 2020 வரை நீடிக்க இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீடித்த குழாய் வழியிலான குடிநீரை பெறும் பயனாளிகளின் அளவை அதிகரிக்க இது உதவி புரியும்.