ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் இரண்டு முறை தேசிய குடற்புழுநீக்க தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் அனுசரிக்கப் படுகின்றது.
இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதாரத் திட்டமானது இந்த தினத்தைக் கடைபிடிக்கும் நிறுவனமாகும்.
அனைத்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஒட்டுண்ணி குடல் புழுக்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் மண்ணின் மூலம் பரவும் குடற்புழுநோய்களின் (Soil Transmitted Helminths - STH) பாதிப்பைக் குறைப்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இந்தப் புழுக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்களின் மலத்திலிருந்து முக்கியமாகப் பரவுகின்றன.
இந்தத் தினத்தின் போது, அல்பெண்டசோல் என்ற குடற்புழுநீக்கமாத்திரையானது குழந்தைகளுக்கு வழங்கப் படுகின்றது.
இந்த நிகழ்வானது 2015 ஆம் ஆண்டு முதல் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற அளவில் (இரண்டு முறை மாத்திரை வழங்குதல்) அனுசரிக்கப்படுகின்றது.