தேசிய குடற்புழு நீக்க தினம் என்பது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்.
இது 1 – 19 வயதிற்குட்பட்ட அனைத்துப் பாலருக்கும், பள்ளி வயதுக் குழந்தைகளுக்கும் (பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாத) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் மூலம் குடற்புழுவை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டது.
அல்பென்டசோல் மாத்திரைகளானது இத்தினத்தின் போது குழந்தைகளுக்கு வாய் வழியாக அளிக்கப் படுகின்றது.
இது இந்தியாவில் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 08 ஆகிய தேதிகள் என இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் தேசிய குடற்புழு நீக்க தினமானது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று அனுசரிக்கப்பட்டது.