TNPSC Thervupettagam

தேசிய குடற்புழு நீக்க தினம்

February 11 , 2018 2477 days 733 0
  • 1 முதல் 19 வயது வரையிலான அனைத்து குழந்தைகளிடத்தும் குடற்புழுத் தொற்றுகளை குணப்படுத்த ஒரு ஒற்றை நிலையான அணுகுமுறை கொண்ட தினமே தேசிய குடற்புழு நீக்க தினமாகும்.
  • இந்த தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10ம் தேதியும் ஆகஸ்டு 10ம் தேதியும் அனுசரிக்கப்படுகிறது.
  • குழந்தைகளில் உண்டாகும் நாடு தழுவிய பொதுசுகாதார அச்சுறுத்தலான குடற்புழுத் தொற்று மற்றும் அது தொடர்பான குறைபாட்டை கையாளுவதே இத்தின அனுசரிப்பின் நோக்கமாகும்.
  • மிகவும் பொதுவான நோய் தொற்றுகளில் ஒன்றான மண் பரவு குடற்புழுவின் (Soil Transmitted Helminth-STH) கட்டுப்படுத்துதலில் சுகாதார முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பதற்காக மருத்துவ வல்லுனர்கள், மாநில அரசு மற்றும் பிற பங்கெடுப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்