TNPSC Thervupettagam

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் - தோற்றுவித்த தினம்

March 18 , 2018 2407 days 1765 0
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (National Crime Records Bureau -NCRB) 2018-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று தனது 33-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியுள்ளது.
  • இத்தினத்தன்று, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட “Citizen Service” எனும் கைபேசி செயலி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியக் குற்றவியல் சட்டத்தால் வரையறுக்கப்பட்டவாறு  குற்றவியல் தரவுகளை சேகரித்து அதனைப் பகுப்பாய்வு செய்யும்   ஒரு  இந்திய  அரசு நிறுவனமே    தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆகும்.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • மத்திய காவல் நிறுவனமாக 1986 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது இந்திய அரசாங்கத்தின் தேசிய மின் ஆளுகை திட்டத்தின் கீழ் உள்ள பணி நோக்கம் உடைய திட்டமான (Mission Mode Project)  குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு பிணைய  அமைப்பை  (Crime and Criminal Tracking Network System)     அமல்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் முதன்மை நிறுவனமாகும்.
  • இந்த பிணைய அமைப்பானது நாட்டில் உள்ள 28000 காவல் நிலையங்களை இணைப்பதால், இதன் மூலம்   தேசிய குற்றவியல் தரவுத் தளத்திலிருந்து  (National data base)  குற்றவாளிகளை அல்லது சந்தேகப்படும் நபர்களைப்   பற்றித் தேட இயலும்.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது குற்றங்கள், சிறை புள்ளிவிவரங்கள், விபத்து மரணங்கள் & தற்கொலைகள் மற்றும் விரல் ரேகைகள் ஆகியவற்றின் மேல் 4 வருடாந்திர அறிக்கைகளை வெளியிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்