TNPSC Thervupettagam

தேசிய சட்ட சேவைகள் தினம் - நவம்பர் 9

November 11 , 2019 1843 days 754 0
  • இந்த தினமானது இந்திய சட்ட உதவிகள் ஆணையச் சட்டம் 1987 ஆம் ஆண்டு இயற்றப் பட்டதை நினைவு கூர்கிறது.
  • இந்தச் சட்டமானது 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தியாவின் தேசிய சட்ட உதவிகள் ஆணையம் (National Legal Services Authority - NALSA) இந்தச் சட்ட விதிகளின் படி 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று அமைக்கப் பட்டது.
  • சட்ட உதவிகள் ஆணையச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விதிகள் மற்றும் வழக்குத் தொடுப்பவர்களின் உரிமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • தேவைப்படுவோருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை வழங்குவது, மத்தியஸ்தம் மூலம் வழக்குகளைத் தீர்ப்பது மற்றும் இணக்கமான தீர்வுகள் அளிப்பது  உள்ளிட்ட நடவடிக்கைகளை NALSA மேற்கொள்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்