அனைத்து குடிமக்களுக்கும் நியாயமான நீதி நடைமுறைகளை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 09 அன்று தேசிய சட்ட சேவைகள் தினம் (NLSD - National Legal Services Day) அனுசரிக்கப்படுகிறது.
சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்கு திறமையான சட்ட வல்லுநர்கள் மூலம் இலவச சட்ட உதவிகள் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் நாடு முழுவதும் லோக் அதாலத்துகள் நடத்தப்படுகின்றன.
இந்த தினம் 1995 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் தொடங்கப்பட்டது.