TNPSC Thervupettagam

தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

January 26 , 2019 2002 days 654 0
  • மத்திய அமைச்சரவையானது தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (GSTAT - Goods and Services Tax Appellate Tribunal) உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
GSTAT - சிறப்பம்சங்கள்
  • தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது புது தில்லியில் அமையவிருக்கிறது.
  • இது இந்த தீர்ப்பாயத்தின் தலைவரால் தலைமை தாங்கப்படும். மேலும் இந்த தீர்ப்பாயமானது ஒரு மத்திய தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஒரு மாநில தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோரைக் கொண்டிருக்கும்.
  • இது சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான இரண்டாவது முறையீட்டு மன்றமாகும். மேலும் இது மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே வாழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதலாவது பொது மன்றமாகும்.
  • மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டத்தின்படி மேல்முறையீட்டு ஆணையங்களால் வழங்கப்படும் முதலாவது மேல்முறையீட்டு தீர்ப்பினை எதிர்த்து GSTAT-ல் மேல்முறையீடு செய்ய முடியும்.
  • நாடெங்கிலும் GST செயல்படுத்தும் விதம் மற்றும் GST-ன் கீழ் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சீர்மை தன்மையை GSTAT ஆனது உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்