தேசிய சாதனை கணக்காய்வு (National Achievement Survey -NAS)
November 14 , 2017 2596 days 877 0
தொகுக்கப்படாத மற்றும் விரிவான கற்றல் நிலைகளைப் பற்றி ஆராயவும், கல்வி அமைப்பின் செயல்திறனை புரிந்து கொள்ளவும், தேசிய சாதனை கணக்காய்வு நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
குழந்தைகளின் கற்றல் அளவை அதிகரிப்பதற்கும், தரமுடைய முன்னேற்றங்களை கொண்டு வருவதற்கும் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் வகுப்பறை அளவில் கல்விக் கொள்கைத் திட்டங்களை திட்டமிடவும் அமல்படுத்தவும், கல்வி கொள்கைகளை வழிநடத்தவும் தேசிய சாதனை கணக்காய்வின் முடிவுகள் உதவும்.
தேசிய சாதனை கணக்காய்வானது நாட்டின் மிகப்பெரிய தேசிய அளவிலான மதிப்பீட்டு ஆய்வாகும். மேலும் இது உலகிலேயே மிகப்பெரிய மதிப்பீட்டு கணக்கெடுப்புகளில் ஒன்றாகும்.
தேசிய சாதனை கணக்காய்வானது மூன்றாம் தரப்பால் மேற்கொள்ளப்படும், நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட சரிபார்ப்பு ஆய்வாகும்.