தேசிய சாலைப் பாதுகாப்பு வாரமானது, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலை அமைச்சகத்தினால் (MoRTH) ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் ஆனது முதன்முதலில் 1989 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப் பட்டது.
சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இது ஆண்டுதோறும் ஜனவரி 11 முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
இந்த வார அளவிலான அனுசரிப்பானது, மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் பயணம் முழுவதும் சாலைப் பாதுகாப்பைப் பேணுவதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பு குறித்து அவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Be a Road Safety Hero' என்பதாகும்.