சுகாதார துறை அமைச்சகமானது, இந்தியா 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதாரச் செலவின மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டில் 64.2% ஆக இருந்த இந்தியாவின் மொத்த சுகாதாரச் செலவினம் ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 39.4% ஆக குறைந்துள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதாரச் செலவினங்களின் பங்கு 1.13 சதவீதத்தில் இருந்து (2014-15) 1.84% (2021-22) ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மொத்த சுகாதாரச் செலவினத்தில் அரசாங்க செலவினத்தின் பங்கு சுமார் 29.0 சதவீதத்தில் இருந்து (2014-15) 48.0% (2021-22) ஆக அதிகரித்துள்ளது.
மொத்த சுகாதாரச் செலவினத்தில் 2014-15 ஆம் ஆண்டில் 5.7% ஆக இருந்த சமூகப் பாதுகாப்புச் செலவினத்தின் பங்கானது 2021-22 ஆம் ஆண்டில் 8.7% ஆக அதிகரித்து உள்ளது.